உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனிதனும் விலங்கும்

0

Posted on : Friday, January 04, 2013 | By : ஜெயராஜன் | In :

மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே  கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக்  காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று, ''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,''இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்றார்.
புலி விலங்குகளை அடித்துக் கொல்லும் கொடிய மிருகம்தான்.ஆனால் அது பசித்தால் மட்டுமே தேவைக்கேற்ப விலங்குகளைக் கொல்லும்.பசி தீர்ந்தால் அது சாதுவாகிவிடும்.மனித இனம் மட்டும் தான் காரணம் ஏதுமின்றி பிற மனிதர்களைக் கொல்லும் குணமுடையது..ஒரு அணுகுண்டைப் போட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லுவான்.ஹிட்லர் போன்ற மனிதர்கள் தான் இனத்தின் பேரால் பல லட்சம் மனிதரைத் தீர்த்துக் கட்ட இயலும்.
ஒரு உணவு விடுதிக்கு திடீரென ஒரு சிங்கமும் முயலும் சேர்ந்து வந்தன.அனைவரும் அரண்டு போய் நின்றபோது விடுதி மேலாளர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முயலிடம் சென்று,''நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?உங்கள் நண்பர் என்ன சாப்பிட விரும்புகிறார்?''என்று கேட்க முயல் சிரித்துக் கொண்டே சொன்னது,''இங்கு நான் மட்டும் தான் சாப்பிட வந்தேன்.என் நண்பர் பசியுடன் இருந்தால் நான் உடன் வந்திருக்க முடியுமா?நானே உணவாகியிருப்பேனே!''என்று சொன்னதாம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment